எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, இன்று (21) காலை 10மணிக்கு கூடியது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்தனர்.

அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ஜுனா இராமநாதன் சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்

அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டார் அர்ஜுனா இராமநாதன். இது தொடர்பிலான ​வீடியோ வைரலாகியுள்ளது.

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என அர்ஜுனா இராமநாதன் பதிலளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )