சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதற்கு சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர், இலங்கைக்கு 4ஆம் கட்டமாக 254 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்படும் எனவும் இன்றைய தினம் (23) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் கட்ட மீளாய்வு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டத்தின் இலக்குகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைவது அவசியம் என இந்த கலந்துரையாடலின்போது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளை, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்றிட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்வதில் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாடு தமது நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக நாணய நிதிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )