தென் கொரியாவின் முன்னாள் அமைச்சர் தற்கொலை முயற்சி
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், தடுப்பு மையத்தில் தற்கொலைக்கு முயன்றதாக, நீதித்துறை அமைச்சக அதிகாரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிம் உள்ளாடைகளை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை முயற்சியில் தோல்வியடைந்தார்.
இராணுவச் சட்டப் பிரகடனத்தால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு தொடர்பான விசாரணை வேகத்தை அதிகரித்ததால், டிசம்பர் 11 அதிகாலையில் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகளும் காவலில் வைக்கப்பட்டனர்.