காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது
லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லங்கா டி10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் பணத்துக்காக போட்டியை காட்டிக்கொடுப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இலங்கையில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.
அதன்படி நேற்று குறித்த பிரிவைச் சேர்ந்த குழுவினர் பல்லேகல பகுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த இந்திய பிரஜையை அவர்களின் பொறுப்பில் எடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.