தேங்காய் தட்டுப்பாட்டிற்கு அதிக வெப்பமே காரணம் !
நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆண்டின் முதல் சில மாதங்களில் நிலவிய மிகவும் வெப்பமான காலநிலையாகும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளமையும் இதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
‘குறுகிய காலத்திற்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதென்றால் குரங்களுகளின் எண்ணிக்கையில் உடனடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அப்படியொரு உடனடி அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும் மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலை 27-28 சென்டிகிரேட் வெப்பநிலையாகும்.
ஆனால் 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது’ என பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்