தேன் என்று சீனிப்பாணி விற்ற மூவர் கைது !

தேன் என்று சீனிப்பாணி விற்ற மூவர் கைது !

சீனி பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொது சுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் இதன்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )