குடு சலிந்துவை கைது செய்ய பிடியாணை
பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத காரணத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் அந்த நிபந்தனையை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாணந்துறை நீதவான் முன்னிலையில் நேற்று (23) சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, குடு சலிந்துவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka