இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை

peoplenews lka

இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை

இன்று (05) அதிகாலை இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழம் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More