மார்க் ஜுக்கர் பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை – டிரம்ப்

மார்க் ஜுக்கர் பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் ஜுக்கர் பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )