அரசியலில் குதிக்கும் சூர்யா ?

அரசியலில் குதிக்கும் சூர்யா ?

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது.

இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )