முதலாமிடத்துக்கு முன்னேறிய றபடா

முதலாமிடத்துக்கு முன்னேறிய றபடா

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை றபாடா அடைந்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் நொமன் அலி 17ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ககிஸோ றபாடா, 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. ஜஸ்பிரிட் பும்ரா, 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. பற் கமின்ஸ் 6. நேதன் லையன், பிரபாத் ஜெயசூரிய, 8. இரவீந்திர ஜடேஜா, 9. நொமன் அலி, 10. மற் ஹென்றி.

இந்நிலையில் நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 107 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் யஷஸ்வி ஜைஸ்வால், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 134 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் செளட் ஷகீல் 27ஆம் இடத்திலிருந்து 20 இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

இது தவிர, இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 74 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் றஷின் றவீந்திர, 18ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜோ றூட், 2. கேன் வில்லியம்சன், 3. யஷஸ்வி ஜைஸ்வால், 4. ஹரி ப்றூக், 5. ஸ்டீவன் ஸ்மித், 6. உஸ்மான் கவாஜா, 7. செளட் ஷகீல், 8. மர்னுஸ் லபுஷைன், 9. கமிந்து மென்டிஸ், 10. றஷின் றவீந்திர.

இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 110 ஓட்டங்களைப் பெற்றதோடு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. மெஹிடி ஹஸன் மிராஸ், 4. ஷகிப் அல் ஹஸன், 5. ஜேஸன் ஹோல்டர்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )