பாக்டீரியா பாதிப்பால் 500 வெளிநாட்டு பறவைகள் பலி
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரி உள்ளது. இந்த ஏரியைச்சுற்றி ஏராளமான வெளிநாட்டு பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வருகின்றன.
இங்கு கடந்த மாதம் 26-ந் தேதியில் இருந்து கொத்துக்கொத்தாக பறவைகள் செத்து வருகின்றன. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நடந்த ஆய்வில், ஒருவித பாக்டீரியாவால் பறவைகள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்ற அந்த பாக்டீரியா தாக்கிய பறவைகளின் இறகு மற்றும் கால்கள் செயலிழந்து உயிரிழந்து வருகின்றன.
நோய் வாய்ப்பட்டுள்ள பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
CATEGORIES India