மருமகளை டிவி பார்க்க மற்றும் கோவிலுக்கு தனியே செல்ல அனுமதிக்காதது கொடுமை கிடையாது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மருமகளை டிவி பார்க்க மற்றும் கோவிலுக்கு தனியே செல்ல அனுமதிக்காதது கொடுமை கிடையாது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கணவன் வீட்டில் மாமியார் கொடுமைப்படுத்தியதால் மனைவி உயிரை மாய்த்தது தொடர்பான வழக்கில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தன் மாமியார் வீட்டில் துன்புறுத்தப்பட்டதால் தான் தங்களது மகள் உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் பெண்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

எங்களது மகளின் தனிப்பட்ட சுதந்திரங்களை கணவனின் குடும்பத்தினர் பறித்தனர் என்று இந்த கிழக்கில் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வீடுகளுக்கு தனியாக செல்லக்கூடாது. கம்பளத்தின் மேல் தான் படுத்து தூங்க வேண்டும் என்று எங்கள் மகளை கணவனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக கணவன் வீட்டார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்பதெல்லாம் கொடுமையின் கீழ் வராது என்று கூறி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )