9 வயது சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளலாம்

9 வயது சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளலாம்

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த மசோதாவின்படி திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் சார்பில் ஈராக் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

கால மாற்றத்தில் சமீப காலமாக மதம் மற்றும் அதன் தத்துவங்கள் வாயிலான மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகி வரும் காரணத்தால் மீண்டும் அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஷியா பிரிவு முஸ்லீம் ஆதிக்க கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்சி வருகிறது.

தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. 1959 இல் கொண்டுவரப்பட்ட சட்டப் பிரிவு 188 மதம் கடந்து இந்த உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த பிரிவு திருத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள்ளது. இந்நிலையில் தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை சுட்டிக்காட்டி மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )