நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் ?
சபரிமலை அய்யப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.
செல்லும் பாதை படு மோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக் காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார்.
நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டங்களை கொண்டு செல்வார்.
நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் அய்யப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு போகும் பழக்கம் ஏற்பட்டது.
CATEGORIES Sri Lanka