சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு
இலங்கையின் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக 184,158 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இது கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மாதமொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.