
வொஷிங்டன் விமான விபத்தில் 19 சடலங்கள் மீட்பு
வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) ஹெலிகொப்டர் மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்துள்ளதுடன் இராணுவ ஹெலிகொப்டரில் 3 வீரர்கள் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் பயணிகள் விமானம் போடோமாக் நதிக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து வொஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
CATEGORIES World News