வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை (6) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர் முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்து நாசமாகிய பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )