
வீட்டு தோட்டத்தில் இருந்து பிடிபட்டுள்ள 102 நச்சுப் பாம்புகள்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து 102 நச்சுப் பாம்புகள் பிடிபட்டுள்ளன
கடந்த வெள்ளிக்கிழமை 7 ம் திகதியன்று தமது தோட்டத்தில் இரண்டு பாம்புகள் உள்ளதாக அதன் உரிமையாளர் வன துறை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளார்
நான்கு முதல் ஐந்து பாம்புகள் இருக்கும் என்று நினைத்து சென்ற அதிகாரிகளுக்கு அங்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியே காத்திருந்தது
40க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பையில் போடும் போதே இரண்டு பாம்புகள் மேலும் சில குஞ்சுளை பொறித்ததாக தெரிவிக்கபடுகின்றது
இறுதியில் 102 பாம்புகள் பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிபட்ட அனைத்தும் அதிக நச்சு தன்மை கொண்ட ரெட் பெல்லிட் பிளாக் பாம்புகள் என்றும் அவை கடித்தால் கடுமையான வலி, வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரியவற்துள்ளது
CATEGORIES Uncategorized