
விடுமுறை வழங்காத ஆத்திரத்தில் சக ஊழியர்களை கத்தியால் குத்திய நபர்
விடுமுறை வழங்க மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரச ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் அரச ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுமுறை தர மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமித் குமார் என்ற நபர் கொல்கத்தாவில் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றிவந்தார். இவர் இன்று காலை, விடுமுறை எடுப்பது தொடர்பில் தனது சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், 4 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். கத்திக்குத்தால் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கத்தியால் குத்திய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.