
போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
860 போதை மாத்திரைகளுடன் பசறை பராக்கிரம மாவத்தை பகுதியில் நேற்று (08) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 மற்றும் 28 வயதுடைய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை முதல் இரவு வரை பசறை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது இவ்வாறு போதை மாத்திரைகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒருவரிடம் இருந்து 420 போதை மாத்திரைகளும், மற்றவரிடம் இருந்து 440 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்று (09) பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka