இராணுவ தலைமையகத்தில் புதிய பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

இராணுவ தலைமையகத்தில் புதிய பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க இலங்கை இராணுவத்தின் 66ஆவது பதவி நிலை பிரதானியாக நேற்று (10) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.

புதிய பதவி நிலை பிரதானி மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், தனது புதிய கடமையை பொறுப்பேற்று கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக பணியாற்றினார். அவரது இராணுவ வாழ்க்கையில் விரிவான அனுபவத்தையும் தலைமைத்துவத்தையும் கொண்டுள்ள சிறந்த அதிகாரியாவார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, அவரது புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நிகழ்வைக் குறிக்கும் வகையில் படம் எடுத்துக் கொண்டார்.

முதன்மை பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புதிய பதவி நிலை பிரதானி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )