மெக்சிகோ வளைகுடாவின் பெயர் மாறுகிறது

மெக்சிகோ வளைகுடாவின் பெயர் மாறுகிறது

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றியமைக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதியன்று, புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே,  ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அவர் அங்கு பேசுகையில்,

 “விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம். ஏனென்றால் அது எங்களுடையது. அமெரிக்க வளைகுடா ஒரு அழகான பெயர். அது மிகச்சரியாக உள்ளது” என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என பெயரை மாற்றம் செய்யும் உத்தரவில், ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை (9) கையெழுத்திட்டுள்ளார்.

மெக்சிகோவில் நடைபெறவுள்ள கால்பந்து போட்டியை காண விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இந்தப் பெயர் மாற்றத்துக்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )