மஹிந்த ராஜபக்ச – இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka