ரணிலுக்கு ஆதரவா மஹிந்த ?
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,எவ்வாறாயினும், உரிய தீர்மானத்தை கட்சி எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.