
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் கேரளாவில் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.