நூடுல்ஸ் பிரியர்களா ?

நூடுல்ஸ் பிரியர்களா ?

நூடுல்ஸ் பிரியர்கள் அதிக உடல் நல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

நூடுல்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும். நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மலக்குடல் புற்றுநோய் வர வழிவகுக்கும். நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை விரைவாக செரிமானமாகி பசியை அதிகரிக்கும்.

நூடுல்ஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.

எனவே நூடுல்ஸ் பிரியர்கள் அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )