ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் வருகிற 2027-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )