விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று (01) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டொலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )