தண்ணீரில் ஊர்ந்த விசித்திர உயிரினம்
கதைகளிலும் திரைப்படங்களிலும் பிரமாண்டமானதாக சித்தரிக்கப்படும் டிராகன்கள் இன்றைய நவீன உலகில் சாதாரணமான ஆன ஒரு உயிரினம்.
அறிவியல் பூர்வமாக முற்காலத்தில் டிராகன்ங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இன்றளவும் நாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் , காண்போருக்கு குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட உயிரினத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகின்றுது.
அந்த வீடியோவில், நீர் தொட்டி ஒன்றில் உடல் முழுதும் பச்சை வண்ணமாக உள்ள உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.
இந்த வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த உயிரினம் ஒரு தண்ணீர் பாம்பு ஆகும். ஆனால் மற்றைய பாம்புகளை விட வித்தியாசமான முறையில் தோற்றம் கொள்ளுவது இந்த டிராகன் விவாதத்தை நெட்டிஸன்கள் மத்தியில் மீண்டும் கிளப்பியுள்ளது.