மீசை, தாடி அடர்த்தியா வளரணுமா ?

மீசை, தாடி அடர்த்தியா வளரணுமா ?

பல ஆண்களுக்கு முறுக்கு மீசை, நீண்ட தாடி வைத்துக்கொள்ள ஆசைதான். ஆனால், ஒரு சிலருக்கு அவ்வாறு அடர்த்தியான மீசை, தாடி வளர்வதில்லை.

இவ்வாறு தாடி,மீசை வளராததற்கு மோசமான உணவுப் பழக்கம், முகத்துக்கு பயன்படுத்தும் சவர்க்காரம், க்ரீம் போன்றவையும் காரணமாக அமையும்.

இதை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.

உணவு – ஊட்டசத்து, புரதம் நிறைந்த உணவுகளான மீன், முட்டை, பால், பீன்ஸ் போன்றவற்றை அதிகமாக உண்ண வேண்டும்.

உறக்கம் – சரியான நேரத்தில் போதிய உறக்கம் அவசியம். மீசை, தாடி வளர்ச்சிக்கும் உறக்கம் தாக்கம் செலுத்துகிறது.

நீர் – உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் அது முடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தினசரி ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் – விளக்கெண்ணெய் கொண்டு தினமும் 15 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்தால் மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளரும்.

டெஸ்டோஸ்ட்ரோன் ஹோர்மோன் – ஆண்களுக்குரிய டெஸ்டோஸ்ட்ரோன் எனப்படும் ஹோர்மோன் தான் முடி வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த ஹோர்மோன் அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மசாஜ் – கற்றாழை, அப்பிள் சிடர் வினிகர், ரோஸ்மேரி ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், மீசை, தாடி வளர்ச்சிக்கு உதவும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )