முகத்தில் மலத்தை பூசிக்கொண்ட இளம் பெண்
பிரேசிலை சேர்ந்த பெண்ணொருவர் வயதாவதை தடுப்பதற்கான சரும பராமரிப்பு எனக்கூறி தனது மலத்தை முகத்தில் பூசிக்கொண்டு வீடியோ பதிவிட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் தனது மலத்தை முகத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இன்ஸ்டாகிராமில் 6.58 லட்சத்திற்கும் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட குறித்த பெண், தனது மலத்தை வழக்கமான ஃபேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவிக் கொள்கிறார்.
துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார். பின்னர் இந்த ஃபேஸ் மாஸ்க்கை கழுவுகிறார். அதன் பின்னர் அவர் சருமத்தை காட்டுவது போல் இந்த வீடியோ முடிகிறது.
இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறான இந்த அழகு சிகிச்சையை விமர்சித்த மருத்துவ நிபுணர்கள், இவ்வாறு செய்வதால் நன்மைகளை விட, உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.