வெட்டப்பட்ட தலையுடன் 18 மாதங்கள் உயிர் வாழந்துள்ள அதிசய கோழி
1945 காலகட்டத்தில் அமெரிக்காவிலுள்ள கொலராடோவில் வசித்து வந்த ஓல்சென் என்ற விவசாயி, தான் வளர்த்த மைக் என்ற கோழியை சமைப்பதற்காக அதன் தலைப் பகுதியில் வெட்டியும் அந்த கோழி சாகாமல் உயிருடன் இருந்துள்ளதாக தெறியவந்துள்ளது.
பிறந்து 5 மாதங்களான அந்த கோழியின் கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டும் கோழியின் கழுத்து மற்றும் தொண்டை நரம்பு வெட்டுப்படாமல் அதன் காது மற்றும் மூளையின் பகுதிகளில் காயமின்றி உயிர் தப்பியதாக தெரியவருகிறது.
அதிசயமாக பார்க்கப்பட்ட இந்தக் கோழிக்கு ஓல்சென். தினமும் பாலும் தண்ணீரும் கொடுத்து பராமரித்துள்ளாரம்
துண்டிக்கப்பட்ட தலையுடன் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்த கோழி தொண்டையில் சோளத் துண்டு சிக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.