12 வருடங்களின் பின்னர் குற்றவாளிகள் அடையாளம்
கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக வியாழக்கிழமை(29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடள் ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு கடந்த 12 வருடங்களாக நடைபெற்று தற்போது விசாரணைகள் யாவும் நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை (29 ) அன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் எதிர் தரப்பு சாட்சியங்களுக்காக ஏற்கனவே தவணை வழங்கப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட 4 நந்தேக நபர்களுக்குமான தீர்ப்பு வழங்க மன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 4 சந்தேக நபர்களும் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
எஸ்.ஆர்.லெம்பேட்