இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: நெதர்லாந்து குழாம் அறிவிப்பு

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: நெதர்லாந்து குழாம் அறிவிப்பு

2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஸ்கொட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணத் தொடரை போல, இந்த தொடரிலும் ஸ்கொட் எட்வர்ட்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்ப்பதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 மும்முனை கிரிக்கெட் தொடரிலும் இந்த நெதர்லாந்து அணி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அந்த தொடரில் ஒரு சில வீரர்கள் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக நஜ்முல் ஹொசைன் பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன் உபதலைவராக டஸ்கின் அஹமட் பெயரிடப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )