![ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதலிடம்! ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதலிடம்!](https://peoplenews.lk/wp-content/uploads/2024/08/w1280-p4x3-2023-01-27T200412Z_577513054_RC27ZY9S2KOQ_RTRMADP_3_OLYMPICS-RUSSIA.jpg)
ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதலிடம்!
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 33 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதன்படி, அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 111 பதக்கங்களை பெற்றுள்ளது.
சீனா இதுவரையில் 33 தங்கம்,27 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களுடன் 83 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம், 18 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 48 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.