AI தொழில்நுட்பத்தினாலான புதிய பென்சில்
உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நன்மை, தீமை என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
அந்த வகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களே கிடையாது என்ற சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் ஏஐ தொழில்நுட்பத்தில் பேனா மற்றும் பென்சில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்தறிவு பேனா, பென்சிலை மீடியா மாங்க்ஸ் நிறுவனம் மற்றும் உலக எழுத்தறிவு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் இரண்டும் இணைந்து உருவாக்கியுள்ளன.
இந்த பேனாவில், டிஜிட்டல் திரை கொண்ட கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள மைக்ரோ போன், நாம் கூறும் வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ளும். பின் இடது புறமுள்ள பட்டனை அழுத்தும்போது நாம் கூறிய வார்த்தைகளை எழுத்துக்களாக மாற்றி டிஜிட்டல் திரையில் காண்பிக்கும். இதனை எழுதப் படிக்க சிரமப்படுபவர்கள் அப்படியே பார்த்து எழுதிக் கொள்ளலாம்.