
நாட்டில் இன்றும் சீரான வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.