
குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்து – 4 பேர் பலி
குருநாகல், தோரயாய பகுதியில் இன்று 10 ம் திகதி காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் 25 பேர் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.