
வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து 30,000 வௌிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மாளிகாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka