
யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ். வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படையினரும், மருதங்கேணிப் பொலிஸாரும் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை நேற்று (20) மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவராவார். அவரிடம் இருந்து 5 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka