INS SHALKI நீர்மூழ்கி கப்பல் கொழும்பை வந்தடைந்தது

INS SHALKI நீர்மூழ்கி கப்பல் கொழும்பை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

64.4 மீற்றர் நீளம் கொண்ட INS Shalki கப்பலின் கட்டளையிடும் அதிகாரியான கமான்டர் Rahul Patnaik மற்றும் மேற்கு கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் (02) சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

குறித்த நீர்மூழ்கி கப்பல் செயற்பாட்டு பணிகள் தொடர்பில் இலங்கை கடற்படையினரை தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது. நாட்டின் பல கடற்பகுதிகளுக்கும் இந்திய நீர்மூழ்கி கப்பல் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நாளை மறுதினம் INS Shalki மீண்டும் இந்தியா நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )