மியன்மாரிலிருந்து இலங்கையர் 34 பேரை மீட்பதற்கு நடவடிக்கை !

மியன்மாரிலிருந்து இலங்கையர் 34 பேரை மீட்பதற்கு நடவடிக்கை !

ஆட்கடத்தலுக்கு உள்ளான 34 இலங்கையர்கள் மியன்மாரில் இருந்து மீட்கப்பட உள்ளதாகவெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் உள்ள சட்டவிரோத முகாம்களில் இருந்து மீட்கப்பட்டு தற்போது தாய்லாந்
தில் தங்கியுள்ள 20 இலங்கையர்கள் தொடர்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மாணவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர். இருப்பினும் அவர்கள் நெருக்கடிகால மதிவளத்துணைக்கு (Counseling) அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர் , அவர்களிடம் வீடியோ அழைப்பில் பேசியதாகவும் கூறினார்.

இவர்களை கூடிய விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் வைஜயந்தி எதிரிசிங்க மீட்கப்பட்டவர்கள் தொடர்பாக தெரிவிக்கையில், தாய்லாந்து அதிகாரிகளால் முதலில் அவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள் என்றும் அங்குள்ள குடிவரவு அதிகாரிகளின் பராமரிப்பில் இவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செயல்முறைக்கான காலக்கெடு இன்னும் தெளிவாக இல்லை என்றும் கூறிய அவர், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இது தொடர்பில் இலங்கைக்கு உதவி வருவதாகவும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் வைஜயந்தி எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )