
தேர்தல் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
ஒவ்வொரு மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
252 ஆம் அத்தியாயத்தின் நகராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) பந்தியில் (அ) வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எச். அபயரத்ன கட்டளையிட்டுள்ளார்.
1) 27 மாநகர சபைகள்
2) 36 நகர சபைகள்
3) 274 பிரதேச சபைகள்
CATEGORIES Sri Lanka