திடீர் மின் வெட்டுக்கு குரங்குதான் காரணம் – மின் மற்றும் எரிசக்தி அமைச்சர்

 திடீர் மின் வெட்டுக்கு குரங்குதான் காரணம் – மின் மற்றும் எரிசக்தி அமைச்சர்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மின் தடைக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, இந்த மின் தடைக்கான அதிகாரபூர்வ விளக்கத்தை இலங்கை மின்சார சபை (CEB) இன்னும் வெளியிடவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )