வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களை கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் நேற்று (31) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் வர்த்தக நோக்கத்திற்காக அடிக்கடி விமானப் பயணத்தில் ஈடுபடுபவர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பெங்களூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 3:50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சந்தேக நபர் ஐந்து பயணப் பைகளுக்குள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் வகைகளை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும், அதே பயணப்பொதியில் 125 போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் உணவகங்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை இறக்குமதி செய்ததாக வர்த்தகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று மகொன நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )