சீனாவுடன் தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது

சீனாவுடன் தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது

சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடன் பல்வேறு நாடுகள் தங்களது தொடர்பை வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சீன தொலைக்காட்சியில் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் புத்தாண்டு செய்தி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தைவானை தனது பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோருகிறது. மாற்றம் மற்றும் கொந்தளிப்பு ஆகிய இரண்டும் உள்ள உலகில் சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடாக, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்தை தீவிரமாக ஊக்குவித்து, உலகளாவிய தெற்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குகிறது என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )