வணிக வளாகத்தில் தீ விபத்து ; 16 பேர் பலி
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் நேற்று (17) நிகழ்ந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்
இந்த தீ விபத்தில், மொத்தம் 16 பேர்உயிரிழந்துள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் அவசரகால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பணிக்குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
CATEGORIES China