திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்

திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்

சீனாவில் பரவுவதாக கூறப்பட்ட எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதே போல் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இந்த தொற்று குறித்து அச்சப்படத்தேவையில்லை. அதே நேரம் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எச்.எம்.பி.வி. தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசணம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )