HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை

HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்துள்ளார்.

பாராளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், “ சில ஊடகங்கள் மற்றும் சில சமூக வலைதளங்களில் நேற்று HMPV குறித்த செய்திகள் வைரலாகி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இதுவரைக்கும் 2025ம் ஆண்டுக்கு HMPV தொற்று பதிவுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. ஒரு நோயாளர் மீது சந்தேகம் நிலவிய நிலையில், அது குறித்த பரிசோதனைகளில் தொற்று உறுதியாகவில்லை.

அதற்கு மாறாக இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளது. அதனையே புதிய தொற்றாக வர்ணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக ஊடகங்கள் மற்றும் செய்திச் சேவைகள் நேற்றைய தினம் பிரசுரித்திருந்தது. இது அவர்களது வாசகர்களின் எண்ணிக்கையினை குறிவைத்து வைரலாக்கப்பட்ட ஒரு செய்தியேயாகும். இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஊடகங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )